இலங்கையின் கொரோனா நிலவரம்! இன்று மட்டும் இருவர் பலி - 369 பேருக்கு தொற்று உறுதி

Report Print Ajith Ajith in சமூகம்
161Shares

இலங்கைக்குள் இன்று இரண்டு பேர் கொரோனா தொற்றால் காவுகொள்ளப்பட்டனர். இவர்களில் ஒருவர் கொழும்பு 12ஐ சேர்ந்தவர். மற்றையவர் மீகொடையை சேர்ந்தவர்.

அத்துடன் இன்று 369 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருமே ஏற்கனவே தொற்றாளிகளாக கண்டறியப்பட்டவர்களின் இணைப்பில் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இதுவரைக் காலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 5022 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.