மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்தவருக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
2243Shares

தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த ஒருவருக்கு மரணதண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார்.

திருகோணமலை - ஆண்டாள்குளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய கெந்தகேவாகே அனுர இசாந்த என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018.02.14 அன்று கந்தளாய் - அக்போபுர பகுதியைச் சேர்ந்த குலசேகர முதியன்சாலாகே ரேணுகா எனும் தனது மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த குற்றத்திற்காக கெந்த கேவாகே அனுர இசாந்த என்ற எதிரிக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2019.04.12 அன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் மரணத்தை விளைவித்த குற்றச்சாட்டின் இலங்கை தண்டனை சட்டக்கோவை கொலை குற்றச்சாட்டின் கீழ் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான இரு தரப்பு வழக்கு விசாரணைகளும், அதற்கான தொகுப்புரைகளும் நிறைவு செய்யப்பட்டன.

இதனையடுத்து இன்றைய தினம் குறித்த வழக்குக்கான தீர்ப்பு திறந்த நீதிமன்றில் எதிரி மற்றும் அரச சட்டத்தரணி, முன்னிலையில் வாசித்து காண்பிக்கப்பட்டு எதிரி குறித்த குற்றச்சாட்டுக்கு குற்றவாளியாக இணங்காணப்பட்டதையடுத்து எதிரிக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You my like this video