வெளியே செல்லும் போது பேனா கொண்டு செல்லுங்கள்! பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

வீட்டிலிருந்து தேவைக்காக வெளியில் செல்லும் அனைவரும் பேனா ஒன்றை தம்வசம் கொண்டு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

வெளியில் சேவை பெற்றுக் கொள்ளும் போது அங்குள்ள லொக் புத்தகத்தில் தகவல் பதிவு செய்வதற்காக பேனா ஒன்றை வீட்டில் இருந்து கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் இடங்களில் புதிதாக ஒருவர் செல்லும் போது தகவல்களை பதிவு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வீட்டில் இருந்து பேனா ஒன்றை கொண்டு செல்வது இலகுவாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்களுக்கு என்று ஒரு பேனா வைத்திருப்பது பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


you my like this video.