எப்போது பாடசாலைகள் ஆரம்பம்? கல்வி அமைச்சரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகளை வழமை போன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி பாடசாலைகள் வழமை போன்று மூன்றாம் தவணைக்காக ஆரம்பமாகவுள்ளது.

தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களே பாடசாலை வர வேண்டும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடந்த ஒன்பதாம் திகதி மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கவிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You my like this video