விடுதி ஒன்றில் தங்கியிருந்த 17 பேருக்கு கொரோனா தொற்று

Report Print Vethu Vethu in சமூகம்
284Shares

கட்டுநாயக்க பிரதேசத்தில் உள்ள விடுதியில் 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.

குறித்த விடுதியில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி சஹிரு பெரேரா தெரிவித்துள்ளார்.

அந்த விடுதியில் குறித்த நோயாளிகள் 17 பேர் உட்பட 57 பேர் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் அதிகமானோர் காட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் பணியாற்றுபவர்கள் என சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி சஹிரு பெரேரா தெரிவித்துள்ளளார்.