இலங்கையில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மூலம் நேற்றிரவு வரை 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதில் மினுவாங்கொட கொத்தணி மூலம் ஆயிரத்து 59 பேருக்கும், பேலியகொட கொத்தணி மூலம் 12ஆயிரத்து 269 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இவ்வாறு இரண்டாவது அலை மூலம் கொரோனா தொற்றியவர்களில் நேற்று வரை 12ஆயிரத்து 903 பேர் குணமடைந்துள்ளனர்.
5ஆயிரத்து 865 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, இலங்கையில் நேற்றிரவு வரை 73 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.