கிழக்கில் அதிகரிக்கும் தொற்றாளர்! மட்டக்களப்பு நகரில் மேலும் ஒரு தொற்றாளர் அடையாளம்

Report Print Kumar in சமூகம்
245Shares

மட்டக்களப்பு நகரில் மேலும் ஒரு தொற்றாளர் நேற்று மாலை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்திலேயே 74வயதுடைய பெண்னொருவர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 09ஆம் திகதி கொழும்பிலிருந்து வந்து சுயதனிமைப்படுத்தலில் இருந்தவரே இவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து வரும் போதே சுகாதார துறையினருக்கு அறிவித்திருந்ததாகவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்மூலம் கிழக்கு மாகாணத்தில் கொரானா தொற்றாளர்களின் எண்ணிக்கை 128ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் இதுவரை 18 ஆயிரத்து 841 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையில் நேற்றிரவு வரை 73 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.