மஸ்கெலியா, காட்மோர் தோட்டத்தின் பிரொக்மோர் பிரிவில் மேலும் இரு கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் கடந்த 17ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.