விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதின் அறையில் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் அந்த சிறைக்கூடத்தை சுத்தம் செய்யும் கைதிகள் சிலரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இன்றைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ரிஷாட் பதியூதின் சிறைச்சாலையில் இருந்து ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக சாட்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைக்கமைய அவர் பிணை கோரியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ரிசாத் பதியூதீனுக்கு சிறைச்சாலையில் சுகாதார பாதுகாப்பு இல்லை என்பதனால் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.