கொரோனாவினால் பாதிப்பை எதிர்நோக்கும் மீனவர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்
65Shares

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் பின்னர் இலங்கையில் உள்ள மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தாம் பிடித்து வரும் மீன்களை விற்பனை செய்ய முடியாத நிலைமையில், 20 வீதமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என தெரியவருகிறது.

இப்படியான நிலைமையில், இறக்குமதி செய்யும் டின் மீன்களுக்கு வரிச் சலுகை வழங்கி, அவற்றை குறைந்தவிலையில் விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை முட்டாள்தனமான செயல் என மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அரசாங்கம் இலங்கையில் உள்ள 7 டின் மீன் உற்பத்தி தொழிற்சாலைகளில் டின் மீன்களை கொள்வனவு செய்து மீனுக்கு உறுதியான விலையை வழங்கி இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அரசியல்வாதிகள் பச்சை மீனை சாப்பிடுவதால், மாத்திரம் மீன் சந்தையின் பிரச்சினையை தீர்க்க முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், டின் மீன் இறக்குமதியாளர்களுடன் இணைந்து அதிகாரிகள் சிலர் இறக்குமதி செய்யப்படும் டின் மீன்களுக்கு வழங்கிய வரிச்சலுகையை இரத்துச் செய்துள்ள அரசாங்கம் மீண்டும் வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.