பொலிஸாரை தாக்குவதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரபல சிங்கள நடிகர் வில்சன் கருணாரட்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் எனவும் பொலிஸாரை தாக்குவதற்கு முயற்சித்தார் எனவும் வில்சன் கருணாரட்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சிங்கள திரைப்படங்களில் வில்லன் வேடங்களிலும் குணசித்திர வேடங்களிலும் வில்சன் கருணாரட்ன தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக கடுமையான வறுமையில் வாடி வரும் சிரேஸ்ட நடிகர் வில்சன் கருணாரட்ன, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபாவினை பெற்றுக்கொள்ள வந்திருந்த போதே இவ்வாறு பொலிஸாரை தாக்க முயற்சித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய முகக் கவசம் அணியாது அவர் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு பெற்றுக்கொள்ள வந்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

முகக் கவசத்தை அணிந்து கொண்டு வருமாறு பொலிஸார் அறிவுறுத்திய போது அவர் அவர்களை தாக்க முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் நடிகர் வில்சன் கருணாரட்னவிடம் கிருலப்பனை பொலிஸார் வாக்கு மூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
வில்சன் கருணாரட்ன இதுவரையில் சுமார் 240 சிங்கள திரைப்படங்களை நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
you my like this video