எதிர்வரும் டிசம்பர் மாத பெருநாள் நிகழ்வுகள் தொடர்பில் சுகாதாரத்துறையினரே தீர்மானிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை தொற்று நோயியல் நிபுணர் வைத்திய கலாநிதி சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பெருநாள் காலத்தில் கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து நிகழ்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும் தளர்வுகளை மேற்கொள்வது அந்த பிரதேசங்களில் கொரோனா பரவலின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் என்று சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பெருநாள் காலத்தை பொறுத்தவரையில் குடும்ப ஒன்றுக்கூடல்கள், வரையறுக்கப்பட்ட பொதுமக்களுடனான நிகழ்வுகள் என்பன அனுமதிக்கப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
you my like this video