சீனாவிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்வதனை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
உள்நாட்டு கேள்வியை பூர்த்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் சீனாவிலிருந்து முகக்கவசங்களை இறக்குமதி செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் முகக்கவசங்களை உற்பத்தி செய்து சந்தையில் நிரம்பல் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரம் முதல் அரசாங்கம் முகக் கவசங்களை இறக்குமதி செய்வதனை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.