இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் பறிமுதல்

Report Print Thirumal Thirumal in சமூகம்
65Shares

தமிழகம்- தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை ஓரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக ஒரு மூடை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்தபோது அதில் இருந்து நோய் எதிர்ப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதில், 1200 மருந்து அட்டைகளில் மொத்தமாக 6 ஆயிரம் மருந்து போத்தல்கள் இருந்ததாக தமிழக கவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்கப்பட்ட மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படுத்துவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.