இத்தாலியில் இருந்து 116 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்
114Shares

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை திரும்ப முடியாமல் இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேடமான விமானத்தில் 116 இலங்கையர்கள் இன்று மதியம் 1.25 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததை அடுத்து இலங்கையர்களை அணி அணியாக நாட்டுக்கு அழைத்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மீண்டும் இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது அணி இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

இலங்கை திரும்பியவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.