ஒரு வாரத்திற்கு மூடப்படும் சிலாபம் மீன் சந்தை

Report Print Steephen Steephen in சமூகம்
84Shares

சிலாபம் மீன் சந்தையை ஒரு வார காலத்திற்கு மூடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு அமைய நாளை முதல் ஒரு வார காலத்திற்கு மீன் சந்தை மூடப்படவுள்ளது.

சிலாபம் பொது மீன் சந்தையில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சந்தையின் செயலாளர் கே.பி.சந்தன குமார தெரிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதுடன் அதில் இந்த நான்கு கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.