அளம்பில் துயிலுமில்லத்தில் பாதுகாப்பு தரப்பினரின் பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துப்புரவுப்பணிகள் முன்னெடுப்பு

Report Print Theesan in சமூகம்
91Shares

முல்லைத்தீவிலுள்ள அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் துப்புரவுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக அளம்பில் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் இன்றுமுன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த பொலிஸார், அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து குறித்த பகுதி இராணுவத்திற்கு உரியதெனவும், துயிலுமில்ல வளாகத்திலிருந்து விலகிச் செல்லுமாறும் கூறியுள்ளனர்.

இதேவேளை,அப்பகுதிக்கு வருகை தந்த புலனாய்வாளர்கள் மற்றும் இராணுவத்தினர் அங்கு துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களைப் புகைப்படம், காணொளி எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

இருப்பினும் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் மாவீரர்களின் உறவினர்கள் இணைந்து துப்புரவுப் பணிகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.