100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்பு

Report Print Kamel Kamel in சமூகம்
75Shares

சுமார் நூறு கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வெலிகமக பிரதேசத்தில் நடைபெற்ற சுற்றிவளைப்பு தேடுதலின் போது இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இலங்கை விசேட அதிரடிப்படையினர் நடாத்திய தேடுதல் வேட்டையின் போது குறித்த போதைப் பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தப் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்தப் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.