பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நாள் ஒன்றுக்கு இருபதாயிரமாக அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆய்வுகூடங்களை பீ.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதம தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகளை இருபதாயிரமாக உயர்த்துவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
என்டிஜன் என்னும் பரிசோதனைகளையும் முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளை உள்ளடக்கும் வகையில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் நடாத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.