இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு 2ஐ சேர்ந்த 70 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறுதியாகக் கிடைக்கப் பெற்ற பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலும் 215 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்றைய தினம் மொத்தமாக இதுவரையில் 435 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

இதன்படி நாட்டின் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,276 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.