கொரோனா ஏனைய பகுதிகளுக்கு பரவாது என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை! அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம்

Report Print Ajith Ajith in சமூகம்
55Shares

மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கொரோனா நோயாளிகளின் கண்காணிப்பு தொடர்பான தரவுகளை வழங்காமைக் காரணமாக கொரோனா ஏனைய பகுதிகளுக்கு பரவாது என்பதற்கான எவ்வித உறுதிப்பாடும் இல்லை என்று அரச வைத்திய அதிகாரிகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் வைத்திய கலாநிதி செனால்பெர்ணான்டோ இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

மேல் மாகாணம் தொடர்ந்தும் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ள பிரதேசமாகவே கருதப்படுகிறது.

எனவே கொரோனா தொற்றாளிகள் தொடர்பான தரவுகளை திரட்டுவதில் காலதாமதம் ஏற்படுத்தப்படாமல் உடனடியாக அது திரட்டப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தில் கவனம் செலுத்தப்பட்டு தீர்மானங்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். அத்துடன் கொரோனா தொற்றாளிகள் தொடர்பான தரவுகள் உடனடியாக திரட்டப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெறுமனே நோயாளிகளின் பெயர்கள், வயது மற்றும் முகவரிகளை வழங்காமல் நோயாளிகளின் முழுமையான விபரங்கள் கிடைக்கப்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.