மாவீரர் நாள் நினைவேந்தல்: வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளருக்கும் அழைப்பாணை

Report Print Sumi in சமூகம்
46Shares

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷுக்கு எதிராக அச்சுவேலிப் பொலிஸாரினால் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் மாவீரர் நாள் அனுஷ்டிப்பு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்குத் தடைஉத்தரவு ஒன்றை வழங்குமாறு அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியால் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதன் பிரகாரம் B/1629/PC/2020 வழக்கு இலக்கத்தின் கீழ் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்துக்குச் சமுகமளிக்க வேண்டும் என்ற அழைப்பாணை நீதிமன்றக் கட்டளைப்படி பதிவாளரினால் அச்சுவேலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக தவிசாளர் நிரோஷிடம் வழங்கப்பட்டுள்ளது.