சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று! இரு வாரங்களுக்கு மூடப்படும் முகாம்கள்

Report Print Ajith Ajith in சமூகம்
80Shares

கட்டுநாயக்க, வெலம்பிட்டியவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு முகாம்களில் கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.

இதனையடுத்து வெல்லம்பிட்டிய - கொட்டிக்காவத்த, வென்னாவத்த சிவில் பாதுகாப்பு முகாம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் சம்மேளன செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த முகாமின் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானமை கண்டறிபப்பட்ட நிலையில் மேலும் 68 அதிகாரிகள் இன்று பீசீஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இதேவேளை கட்டுநாயக்க சிவில் பாதுகாப்பு முகாமிலும் அதிகாரி ஒருவர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனையடுத்து அங்கு 28 அதிகாரிகள் தன்மைப்படுத்தப்பட்டு பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று பாலசூரிய தெரிவித்துள்ளார்.