முஸ்லிம்களின் ஜனாஸா எரித்தலை எதிர்த்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மனு தாக்கல்

Report Print Mubarak in சமூகம்

இலங்கையில் முஸ்லிம்களின் ஜனாஸா எரித்தலை எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழுவில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தேசிய விடுதலை மக்கள் முன்னனியின் தலைவர் முஸம்மில் மொஹைதீன் தெரிவித்துள்ளார்.

முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்தில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் செயலாளர் மற்றும் பொருளாளர் பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு ஜனாஸா எரிப்பு விடயத்தினை எதிர்த்து வருகின்றோம்.

இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் ஜனாஸாக்களை திட்டமிட்டு எரித்து வருகின்றார்கள்.

உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத ஒரு விடயத்தினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

இந்த செயற்பாட்டுக்கு நாம் எமது பாரிய எதிர்ப்பை வெளியிடுவதோடு, உயர் நீதிமன்றிலும் அதேபோன்று நீதி அமைச்சர் அலி சப்ரியிடமும் நாம் முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.