ஐரோப்பா செல்ல முயன்ற யாழ். இளைஞன் விமான நிலையத்தில் கைது

Report Print Vethu Vethu in சமூகம்

ஐரோப்பிய நாடான இத்தாலி செல்ல முயற்சித்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போலித் தகவல்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட விசா மூலம் கட்டார் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சிலரால் நேற்று அதிகாலை குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய யாழ்ப்பாணம், கொடிகாமம் பிரதேசத்தை சேர்ந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டார் செல்வதற்காக அந்த நாட்டு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது அவரது கடவுச்சீட்டை சோதனையிட்ட போது அது போலியாதெனவும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் முதல் முறையாக இத்தாலி செல்லும் ஒருவராகும். தான் இதற்கு முன்னர் இத்தாலி சென்ற ஒருவர் போன்று விசா மற்றும் கடவுச்சீட்டுகளை மாற்றி போலித் தகவல்கள் உள்ளடக்கி தயாரித்துள்ளார்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்ற விசாரணை திணைக்கள அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

you my like this video