அதிகரித்த கொரோனா நோயாளிகள் - தென்னிலங்கையில் மற்றுமொரு பகுதி லொக்டவுன்

Report Print Vethu Vethu in சமூகம்

பண்டாரகம - அட்டழுகம பிரதேசத்தை இன்று லொக்டவுன் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் ஒரே நேரத்தில் 17 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இவ்வாறு குறித்த பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் இதுவரையில் 93 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.