புதிய கட்டிட தொகுதிகளில் ஆரம்பமான நீதிமன்ற நடவடிக்கைகள்..

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத் தொகுதிகளில் நீதிமன்ற செயற்பாடுகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் பிரதேசத்திலும் முல்லைத்தீவு நகர் பகுதியிலும் இரண்டு நீதிமன்றக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று காரணமாக இதனுடைய திறப்பு விழா நிகழ்வுகள் இடம் பெறுவதற்கு ஏற்கனவே திகதி தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அவை பிற்போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் குறித்த இரண்டு நீதிமன்ற கட்டிட தொகுதிகளிலும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.