சிறைச்சாலைகளில் 617 கொரோனா தொற்றாளர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

சிறைச்சாலைகளில் இதுவரை 617 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் நேற்றைய தினம் 15 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 13 பேர் பெண் கைதிகள். இவர்கள் தற்போது சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களில் 578 பேர் கைதிகள் என்பதுடன் 39 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.