தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவிக்கு சுமந்திரன் எம்.பி. இன்று நேரில் வாழ்த்து

Report Print Rakesh in சமூகம்

இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வடக்கு மாகாணத்தில் முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழியில் இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்த யாழ்ப்பாணம், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் வாழ்த்தினார்.

குறித்த மாணவியின் இளவாலை இல்லத்துக்குச் சென்ற சுமந்திரன் எம்.பி., ஜனுஸ்காவின் கல்வி உயர்வுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மாணவி ஜனுஸ்காவையும் மகாஜனக் கல்லூரி அதிபர் ம.மணிசேகரனையும் மாலை அணிவித்துக் கௌரவித்தார்.

சுமந்திரனுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான லயன் சி.ஹரிகரன், பா.மரியதாஸ் மற்றும் அனோஜன் ஆகியோரும் சென்று மாணவிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.