மறைந்த மாநாயக்க தேரரின் மறைவிற்கு நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி மறுப்பு..?

Report Print Kamel Kamel in சமூகம்

இலங்கையின் பிரதான பௌத்த பீடங்களின் ஒன்றான ராமன்ய நிக்காயவின் மாநாயக்கத் தேரர் நாபானே பிரேமசிறி தேரரின் மறைவினை ஒட்டி நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு எதிர்க்கட்சி அனுமதி கோரியுள்ளது.

இதன் போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

அவையின் இன்றைய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவையில் கோரியுள்ளார்.

எனினும், இது தொடர்பில் பிரேரணை ஒன்றை முன்வைத்து அதன் பின்னர் மௌன அஞ்சலி செலுத்த முடியும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டில் அஸ்கிரி பீடாதிபதி மறைந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் கோரிக்கைக்கு அமைய ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது எனவும், இந்த விடயத்தை அரசியல்மயமாக்க வேண்டாம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஆளும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து பிரேரணை ஒன்றை முன்வைத்து அனைத்து தரப்பினரும் சேர்ந்த மௌன அஞ்சலி செலுத்துவதே பொருத்தமானது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.