யாழ்.மண்டைதீவு பகுதியில் குளத்திற்குள் மூழ்கி இரு சிறுவர்கள் பலி!

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணம் - மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் குளத்திற்குள் மூழ்கி இரு சிறுவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது மண்டைத்தீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் தனது சித்தப்பாவுடன் வயலுக்கு சென்ற நிலையிலேயே குளத்திற்குள் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.