வெலிகமயிலிருந்து நேற்று கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய வெளிநாட்டில் இருக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ரத்கம பகுதியைச் சேர்ந்த இவர், இத்தாலியில் இருந்து இந்த கடத்தல்களை கையாள்வதாக காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் நேற்று மாலை வெலிகம பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ ஹெரோயின் போதைப்பொருளை கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின் தொடர்பில் 33, 34 மற்றும் 37 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களியே இத்தாலியில் உள்ள கடத்தல்காரர் தொடர்பான விடயமும் உள்ளடங்கியிருந்தது.
இதனையடுத்து சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பின் ஊடாக இன்டர்போல் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளின் உதவியைப் பெற இலங்கை காவல்துறை திட்டமிட்டுள்ளதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.