இலங்கைக்குள் இன்று பதிவாகிய கொரோனா தொற்றாளிகளின் நிலவரம்!

Report Print Ajith Ajith in சமூகம்
78Shares

இலங்கைக்குள் இன்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் இருந்து தொற்றுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19771 ஆக உயர்ந்துள்ளது.

6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை தொற்று நோயியல் மருத்துவமனையில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் தப்பிச்சென்ற பெண் இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.