முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் பொலிஸார்,படையினர் குவிப்பு! யாரும் உள் நுழையாதவாறு தடை

Report Print Varunan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு முழுமையாக நீதிமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் படையினர் ,பொலிஸார் நிலை கொண்டுள்ளதுடன்,துயிலும் இல்ல வாயிலில் வீதித்தடை போடப்பட்டுள்ளது.

இதன்போது துப்பாக்கி ஏந்திய படையினரும்,பொலிஸாரும் வீதியின் இருமருங்கிலும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், சிவில் உடையில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.