இலங்கைக்கு கடத்திவரப்பட்ட பெருந்தொகை மஞ்சள்! இருவர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
52Shares

நாட்டுக்குள் கடத்திவரப்பட்ட மஞ்சள் மற்றும் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னாரில் கடற்படை மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போது இவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை, மன்னார்- எருகுலம்பிடி கடற்கரை பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட சோதனையில் 710 கிலோவுக்கும் அதிகமான உலர்ந்த மஞ்சள் மற்றும் 3.7 கிலோ கேரளா கஞ்சா ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், 35 அகவைகளை கொண்ட எருக்கலம்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.