இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கை மத்திய வங்கியின் பணியாளர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அவர் தொற்றாளியாக கண்டறியப்பட்டதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணியாளர் இப்போது மருத்துவ கவனிப்பில் உள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று நோயைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன,அதில் தூய்மைப்படுத்தல் மற்றும் அதன் தலைமை அலுவலக வளாகத்தை கிருமி நீக்கம் செய்தல், நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிதல் மற்றும் சாத்தியமான தொடர்பை கொண்டவர்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகள் அடங்குவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்தநிலையில் பரிசோதிக்கப்பட்ட ஏனைய அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மாற்று நடவடிக்கையாக 2020 நவம்பர் 20 முதல் இரண்டு வார காலத்திற்கு பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பொது மக்களின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்ற வகையில், பொதுமக்கள் தொடர்ந்தும் மத்திய வங்கியை மின்னணு முறையில் அல்லது தொலைபேசி 011-2477966 வழியாகவோ தொடர்புக்கொள்ள முடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.