சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Rakesh in சமூகம்

சிறைச்சாலைகளில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

இரத்தினபுரி,குருவிட்ட சிறைச்சாலையில் மேலும் 15 பேர் கொரோனாத் தொற்றுடன்அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சிறைச்சாலைகள் அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

அவர்களுள் 13 பேர் பெண் கைதிகள் எனவும், ஏனைய இருவரும் பெண் அதிகாரிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, கண்டி போகம்பறை சிறைச்சாலை, மாத்தறை சிறைச்சாலை, காலி பூஸா சிறைச்சாலை மற்றும் இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலை ஆகியவற்றில் இதுவரையில் கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 578 கைதிகளும், 39 அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர் என்று சிறைச்சாலைகள் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.