வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! வைத்தியர் சத்தியமூர்த்தி தகவல்

Report Print Rakesh in சமூகம்
655Shares

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 266 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருக்கும் விமானப் படையைச் சேர்ந்த 8 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கிளிநொச்சியில் இருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இன்று மாத்திரம் மொத்தமாக 487 கொரோனா தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அனைவரும் தொற்றாளிகளின் தொடர்புகளில் தொற்றுக்களுக்கு உள்ளானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்களின் இதுவரையான மொத்த எண்ணிக்கை 19,771 ஆக உயர்ந்துள்ளது.

6101 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 13590 பேர் தொற்றில்இருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..