வாசனை உணர முடியவில்லை எனில் கொரோனா அறிகுறியாக இருக்கலாம்! தொற்று நோய் விஞ்ஞான பிரிவு

Report Print Vethu Vethu in சமூகம்

ஒருவருக்கு சுவை அல்லது வாசனை தெரியவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் தொண்டை வலி மற்றும் நெஞ்சு வலி ஏற்படுவதும் கொரோனா அறிகுறியாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிகுறி வேறு இன்புளுவென்ஸா உட்பட தொற்று நோய்களில் ஏற்பட கூடும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எப்படியிருப்பினும் நீண்ட நாட்களாக தொண்டையில் பாதிப்பு உள்ளவர்கள் அது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள தேவையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.