இலங்கைக்கு வரவுள்ள 42 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள்!!

Report Print Vethu Vethu in சமூகம்

உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரை செய்யப்படும் கொரோனா வைரஸிற்கு எதிரான 42 இலட்சம் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பினால் அதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபக தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. இதனால் இலங்கைக்கு தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

அதற்கென சில நடைமுறைகள் உள்ளது. அந்த நடைமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகின்றதா என உலக சுகாதார அமைப்பினால் ஆராயப்படுகின்றது.

சுகாதார அமைச்சினால் அது தொடர்பிலான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Like This Video..