வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைய மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்காக அரசினால் அமுல்படுத்தப்படும் தேசிய பொருளாதார வேலைத்திட்டத்திற்கமைய கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேவைக்கான முன்னுரிமைப் பணியொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை வெற்றிகரமாகச் செயற்படுத்து தொடர்பிலேயே குறித்த கலந்துரையாடல் மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கிராமிய அபிவிருத்தி தொடர்பில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்களும் பெறப்பட்டதுடன், குறித்த வேலைத்திட்டத்தை இணைந்து முன்னெடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இவ் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பு செயலாளர் கி.டினேஸ் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.