அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கம்... ! சிங்கள ஊடகம் தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, அலரி மாளிகையின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, கொரோனா அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு, மறு அறிவித்தல் வரை கடமைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த சில விசேட அதிரடிப்படை உத்தியோத்தகர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இது தொடர்பில் அலரி மாளிகையினால் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

you my like this video