முல்லைத்தீவில் மாட்டுடன் மோட்டார்சைக்கிளொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

முல்லைத்தீவு - மாங்குளத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு ஒட்டுசுட்டான் வீதியின் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 57ஆவது படைப்பிரிவினை சேர்ந்த சிப்பாய் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் வீதியில் குறித்த இராணுவ சிப்பாய் மோட்டார்சைக்கிளில் பயணித்த வேளை அவர் பயணித்த மோட்டார்சைக்கிள் மணவாளன் பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் படையினரின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.