முன்னாள் அமைச்சரின் மகன் கைது

Report Print Steephen Steephen in சமூகம்
1250Shares

கொழும்பு - கறுவாத்தோட்டத்தில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை திட்டி, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் புதல்வரையே நேற்று கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாவட்ட நீதிபதியின் வீட்டுக்கு அருகில் சந்தேகநபரான, முன்னாள் அமைச்சரின் புதல்வர் வாகனம் ஒன்றை நிறுத்தியுள்ளார்.

வாகனத்தை அங்கு நிறுத்த வேண்டாம் என பொலிஸ் உத்தியோகத்தர் கூறியதால், அவரை திட்டி, அச்சுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து பொலிஸ் உத்தியோகஸ்தர், நீதிபதியிடமும், கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்தே பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

you my like this video