பலாலியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எறிகணை குண்டுகள் மீட்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

பலாலி - அன்ரனிபுர பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 2 எறிகணை குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட இரு எறிகணை குண்டுகளே மீட்கப்பட்டுள்ளன.

அன்ரனிபுரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியைத் துப்பரவு செய்யும் போது குறித்த குண்டுகளைக் கண்டுள்ளார்.

உடனடியாக துப்புரவு பணியை நிறுத்தி விட்டு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு அறிவித்துள்ளார்.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள தரவை பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.