கொழும்பின் கொரோனா நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணி நாளை கூடுகிறது.
இதன்போது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமா? என்பது குறித்து ஆராயப்படும் என்று ஜனாதிபதி செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்களை விடுவிப்பது என்பதை பிரதான கருப்பொருளாக கொண்டு சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் 83 பேர் கொரோனாவினால் காவு கொள்ளப்பட்டதும் அதில் அண்மைய நாட்களிலேயே அதிகமானோர் பலியாகியுள்ளமை குறித்தும் இந்த கலந்துரையாடலின் போது ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை பொரளை, வெள்ளம்பிட்டிய, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித்தெரு ஆகிய கொழும்பு மாவட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுக்கப்படுகின்றதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.