குருநாகலில் அனைத்து அஞ்சல், உப அஞ்சல் அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

குருநாகல் மாவட்டத்தின் அனைத்து அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்கள் யாவும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண அஞ்சல் துறையில் 14 பணியாளர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

இதனையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரிவு அஞ்சல் அலுவலகம் மற்றும் குருநாகல் பிரதான அஞ்சல் அலுவலகங்களிலேயே இந்த 14 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் சுகாதார அதிகாரிகளின் அறிவித்தலுக்கு அமையவே குருநாகல் அஞ்சல்துறையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.