ஹட்டனை அண்மித்த தோட்டப்பிரதேசங்களில் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் எடுக்கப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளின் போது அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஹட்டன் காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கொழும்பிலிருந்து வருகை தந்த பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வெலிஓயா தோட்டத்தில் மூவருக்கும், ஸ்ட்ரெதன் தோட்டத்தில் ஒருவருக்கும், பிளக்வோட்டர் தோட்டத்தில் மூவருக்கும், அம்பத்தலாவையில் ஒருவருக்கும், கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவருமே தலைநகரிலிருந்து வருகை தந்தவர்களாவர். அதேவேளை நாம் இப்போது கலுகல்ல சோதனை சாவடிக்கு அருகாமையிலேயே கொழும்பிலிருந்து பஸ்களில் வருகை தருவோருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளை செய்து வருகின்றோம்.

மேலும் இவ்வாறு தலைநகரிலிருந்து வருவோர் பற்றிய தகவல்களை எமக்கு அறியத்தருமாறு பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம். இது பரவல் வீதத்தை கட்டுப்படுத்த உதவும் என குறிப்பிட்டுள்ளார்.