கொவிட் தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது: நிபுணர் குழு

Report Print Kamel Kamel in சமூகம்

கொவிட்-19 நோய்த் தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என இந்த விவகாரம் குறித்து ஆராயும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நோய்த் தொற்றினால் மரணிப்போரை தகனம் செய்யாது அடக்கம் செய்வதற்கான சாத்தியங்கள் குறித்து நிபுணர் குழு ஆராய்ந்துள்ளது.

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இறப்பவர்களை அடக்கம் செய்ய வேண்டியது அவசியமானது என முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் கோரியிருந்தன.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என இந்த நிபுணர்கள் குழு கூடி ஆராய்ந்து தீர்மானித்துள்ளது.

கொவிட் தொற்றாளிகளை அடக்கம் செய்வது குறித்து ஆராயும் நோக்கில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நிபுணர் குழுவொன்றை அண்மையில் நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தொடர்ந்தும் எரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.