இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு பலி!

Report Print Murali Murali in சமூகம்
218Shares

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 90ஆக அதிகரித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்தள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிவிப்பின் பிரகாரம், இறுதியாக மூன்று கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், ஒரு ஆணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 60 மற்றும் 86 வயதான பெண்கள் இருவரும், 60 வயதான ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 335 கொரோனா நோயாளர்கள் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 16,978 ஆக அதிகரித்துள்ளது.